Monthly Archives: July 2022

#RajaChorusQuiz 309 சவாரி சவாரி

கவிஞர் வாலியின் வரிகளில் அமைந்த ஒரு குழுப் பாடல். இங்கே பகிர்வது எஸ்.பி.சைலஜா குழுவினர் பாடுவது. இதே பாடல் மலேசியா வாசுதேவன் குழுவோடும் உண்டு. இதுக்கும் குளு வேணுமா குழு 🙂 கட்டவண்டி கட்டவண்டி – சகலகலாவல்லவன்

Posted in Uncategorized | 45 Comments

#RajaChorusQuiz 308 நம் ராஜ்ஜியம்

கங்கை அமரன் அவர்களே அனைத்துப் பாடல்களும் எழுதிய திரைப்படம் இது. இதே பெயரில் சமீப ஆண்டில் கூட ஒரு திரைப்படம் வெளியாகியிருக்கின்றது. இந்தப் போட்டியில் இடம் பெறும் படத்தில் ராதிகா முக்கிய நாயகி. டாக்டர் கல்யாண் குழுவினர் பாடுகின்றார்கள். தேவன் சபையிலே நடக்கும் திருமணம் – மீண்டும் ஒரு காதல் கதை

Posted in Uncategorized | 27 Comments

#RajaChorusQuiz 307 கோட்டையில் கொடி ஏத்து

குதிரைக் குளம்பொலி கேட்குமாற் போலவொரு ஆர்ப்பரிப்போடு கோரஸ் குரல்கள் வருகின்றன அல்லவா? அதுவே படத்தின் கதைக்கும் பொருந்திப் போனதொன்று. ராஜா மாதிரியான கதைக்கு ராஜாவே அனைத்துப் பாடல்களையும் எழுதியிருக்கிறார். சத்யராஜ் நாயகன். கொடிகட்டி பறக்குற ராஜா – ஆளப்பிறந்தவன்

Posted in Uncategorized | 31 Comments

#RajaChorusQuiz 306 திருமணக் கொண்டாட்டம்

எஸ்.ஜானகி குழுவினர் பாடும் பாடல் இன்றைய போட்டியில். பஞ்சு அருணாசலம் அவர்களது வரிகளில் அமைந்த பாடல் இது. அடி ராக்காயி மூக்காயி / சுத்தச் சம்பா பச்ச நெல்லு – அன்னக்கிளி

Posted in Uncategorized | 31 Comments

#RajaChorusQuiz 305 வா நீ ராணித்தேனீ

நடிகர் பிரபு நடித்த படங்களில் ஒன்று. சித்ராவோடு மனோ குழுவினர் பாடுகிறார்கள். சத்தம் வராமல் முத்தம் கொண்டாடும் – மை டியர் மார்த்தாண்டன்

Posted in Uncategorized | 43 Comments