Monthly Archives: March 2022

#RajaChorusQuiz 219 கண்ணல்ல கண்ணல்ல

இன்று இளையராஜாவின் ஆரம்பகாலப் படங்களில் இருந்து ஒரு பாடல். இதுவும் ஒரு பறவை இனத்தைக் குறிக்கும் பெயர். சிவக்குமார் நாயகனாக நடித்த படங்களில் ஒன்று. எஸ்.பி.பாலசுப்ரமணியம் குழுவினரோடு பாடிய ஒரு கல்யாணக் குதூகலம் இது. காவேரிக்கரை ஓரத்திலே (பொன்னுல பொன்னுல) – சிட்டுக்குருவி

Posted in Uncategorized | 40 Comments

#RajaChorusQuiz 218 நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி

கவிஞர் கண்ணதாசன் வரிகளோடமைந்து குழந்தைகளோடு ஆடிப் பாடும் பாட்டு. பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடுகின்றார். கமல்ஹாசன் நடித்த இரண்டெழுத்துப் படம். ஆடுங்கள் பாடுங்கள் – குரு

Posted in Uncategorized | 44 Comments

#RajaChorusQuiz 217 ஒளிபடைத்த பார்வை

கவிஞர் வாலியின் வரிகளோடு இன்றும் மகளிர் தினத்தைக் கொண்டாடுவோம் வாருங்கள். பாடலைக் கூட்டுக் குழுவினரே பாடுகிறார்கள். மகளிர் மட்டும் அடிமைப்பட்ட இனமா இனமா – மகளிர் மட்டும்

Posted in Uncategorized | 33 Comments

#RajaChorusQuiz இன்று போட்டி இல்லை

தவிர்க்க முடியாத காரணத்தால் இன்றைய போட்டி இடம்பெறாது.

Posted in Uncategorized | Leave a comment

#RajaChorusQuiz 216 பார்த்த விழி பூத்திருக்க

இன்று இடம்பெறும் இசைத்துணுக்கு பாசத்தின் ஓசையாக மலர்கின்றது. கே.ஜே.ஜேசுதாஸ் மற்றும் சித்ரா தனித்தனியாகப் பாடியிருக்கிறார்கள். கவிஞர் வைரமுத்துவின் பாடலை எழுதியிருக்கிறார். படத்தின் தலைப்பே பாடலின் ஆரம்ப வரிகள். பூவே பூச்சூடவா – பூவே பூச்சூடவா

Posted in Uncategorized | 52 Comments