Monthly Archives: December 2021

#RajaChorusQuiz 127 தொட்டுத் தொட்டுத் தாலாட்ட

எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம் குழுவினருடன் பாடும் பாடல். இந்தப் பாடலின் ஒலித்தரமே வெகு உச்சமாக இருக்கும். கவிஞர் வாலியின் வரிகளோடு அமைந்த பாடல். முரளி நடித்த படமிது. தர்மம் இல்லைன்னா பதில் உண்டு. முத்துமணி முத்துமணி – அதர்மம்

Posted in Uncategorized | 46 Comments

#RajaChorusQuiz 126 புதுமை இளமை

கவிஞர் முத்துலிங்கம் அவர்களது வரிகளில் ஒரு இளமைத்துள்ளல் பாடல். எஸ்.ஜானகியுடன் ரமேஷ் பாடும் பாடலிது. ராதா நடித்த படம் தன் சகோதரிக்கு நெருக்கமான தலைப்பு. இது இளமை இளமை – அம்பிகை நேரில் வந்தாள்

Posted in Uncategorized | 42 Comments

#RajaChorusQuiz 125 ஆடிடும் கூடிடும்

அந்தக் காதலர்களின் மகிழ் தருணத்தில் மரக்கிளையில் நின்று ஆர்ப்பரிக்கும் குருவிக்கூட்டம் போலொரு அழகிய ஆலாபனையாய் கோரஸ். கங்கை அமரனின் இனிமை ததும்பும் வரிகள். எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி குழுவினர் பாடும் இந்த அழகான பாடலைத் தவறாமல் கண்டுபிடித்தால் பன்னீர் தெளித்துப் பூச்சொரிவேன் மக்களே 😊 பூந்தளிர் ஆட பொன்மலர் சூட – பன்னீர் புஷ்பங்கள்

Posted in Uncategorized | 49 Comments

#RajaChorusQuiz 124 தென்றலே என்னைத் தொடு

இன்று இடம்பெறும் பாடலை கவிஞர் பிறைசூடன் அவர்கள் எழுதியிருக்கிறார். இதன் சோக வடிவம் ஒன்றை இளையராஜா பாடியிருக்கிறார். மனோ, சித்ரா & குழுவினருடன் பாடும் அழகான காதல் பாட்டிது. படிச்சுப் படிச்சுச் சொல்லியாச்சு ஆக்‌ஷன் கிங் ஆக்காம பதிலோடு வருக. பூங்காற்றே இது போதும் – படிச்ச புள்ள

Posted in Uncategorized | 38 Comments

#RajaChorusQuiz 123 எண்ணி எண்ணிப் பார்க்கும் போது

மனோ, எஸ்.ஜானகி & குழுவினர் பாடும் பாட்டு இன்றைய புதிரில். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்திலிருந்து இந்தப் பாட்டு, இதே படத் தலைப்பிலும் தற்காலத்தில் ஒரு படம் வந்தது. ஒண்ணு ரெண்டு மூணு நாலு – தர்மதுரை

Posted in Uncategorized | 45 Comments