Monthly Archives: December 2021

#RajaChorusQuiz 137 காதல் தீயே

படத்தின் இயக்குநரே பாட்டு எழுதியதும் கூட. எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா & குழுவினர் பாடுகிறார்கள். நாயகர்களில் ஒருவர் பிரபு. நெருப்பு நெருப்பு – உறுதிமொழி

Posted in Uncategorized | 35 Comments

#RajaChorusQuiz 136 வாக்களித்த பாவை

கங்கை அமரன் வரிகளில் அமைந்த பாடல் இன்றைய போட்டியில். ஜெயச்சந்திரனும், எஸ்.ஜானகியும் பாடுகிறார்கள். தெய்வப் பிறவியாய் நாயகி, இந்த நாயக ஜோடி சேர்ந்தாலே தனித்துவம். அதுவும் இந்தப் படத்துக்கு முந்தி இவர்கள் ஜோடி கட்டிய படம் எல்லாத் திசைகளிலும் வெற்றி வாசல் திறந்தது. ஊரெல்லாம் சாமியாகப் பார்க்கும் – தெய்வவாக்கு

Posted in Uncategorized | 51 Comments

#RajaChorusQuiz 135 வெளிநாட்டு மலரே

ஹரிஹரன் குழுவினர் எடுத்து வரும் பாட்டு இன்று. படத்தின் இயக்கு நரே இந்தப் பாடலை எழுதியிருக்கிறார். நாயகனின் தந்தையும் ஒரு நடிகர் தான். இந்தப் பாடலுக்கும் நீங்கள் வெளிநாடு செல்ல வேண்டும். வாசமிக்க மலர்களைக் கொண்டு / காதல் மீதிலொரு காதல் – காதல் கடிதம்

Posted in Uncategorized | 33 Comments

#RajaChorusQuiz 134 தக்க தையா தையா

வழக்கமாக வாலி அவர்கள் தான் இம்மாதிரிப் புரியாத வார்த்தை ஜாலங்களைக் காட்டுவாரென்றால் இங்கே கங்கை அமரன் அந்தப் பணியைச் செய்திருக்கிறார். கங்கை அமரன் பாடல்கள் எழுதியதோடு, இயக்கிய படம். எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம் & குழுவினர் இணைந்து பாடுகிறார்கள். இந்தப் படத்தின் மற்றைய பாடலில் சொர்க்கம் கண்டதால் இந்த அட்டகாசமான பாடலை அதிகம் பிரபலமாக்கவில்லை. நாடு விட்டு … Continue reading

Posted in Uncategorized | 47 Comments

#RajaChorusQuiz 133 தூரத்தில் நான் கண்ட உன்முகம்

கவிஞர் வாலியின் வரிகளோடமைந்த இனிய பாடல் இன்றைய புதிரில். கே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா குழுவினர் பாடுகின்றார்கள். படத்தின் தலைப்பு மகாகவி சுப்ரமணிய பாரதியார் பாடலொன்றை ஞாபகமூட்டும். கண்ணா வருவாயா – மனதில் உறுதி வேண்டும்

Posted in Uncategorized | 52 Comments