Monthly Archives: October 2021

#RajaChorusQuiz 82 வஞ்சி இளமானே

இளையராஜாவின் குடும்ப நிறுவனத் தயாரிப்பில் ஒரு சூப்பர் படம். பாடலை எழுதி இசையமைத்தவர் ராஜா, மனோ, எஸ்.பி.சைலஜா & குழுவினர்கள் பாடும் இந்தப் பாட்டின் தாள லயமும், இசை ஆர்ப்பரிப்புமே கற்பனையிலும் அதற்கான காட்சி போட்டு ரசிக்க வைக்கும். படத்தின் எல்.பி ரெக்கோர்டில் பெண் குரலைச் சித்ரா ஆக்கி விட்டார்கள். வா வா மஞ்சள் மலரே … Continue reading

Posted in Uncategorized | 49 Comments

#RajaChorusQuiz 81 அரிதாரத்தைப் பூசிக் கொள்ள ஆசை

எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் குழுவினரோடு கொட்டமடிக்கும் ஒரு துள்ளிசைப் பாட்டு. சத்யராஜுக்குக் கிடைத்த அல்வாத்துண்டுகளில் ஒன்று இது. கவிஞர் வாலி அவர்களின் வரிகளில் ஓடும் பாட்டு. ஆட்டமா பாட்டாமா பாத்துக்கோ – நடிகன்

Posted in Uncategorized | 50 Comments

#RajaChorusQuiz 80 கம்மாக்கரை ஓரம்

கவிஞர் வாலி அவர்கள் வரிகளில் ஒரு கலக்கலான தெம்மாங்குக் காதல் பாட்டு. இந்தப் பாட்டில் கோரஸ் குரல்களும் இடையில் பாடும் தருணம் ஆகா போட வைக்கும் ஓஓஓ ஓஹொகோ. எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி குழுவினர் பாடுகின்றார்கள். படத்தின் தலைப்பில் முதல் பாதி ரஜினி படம், இரண்டாவது பாதி சிம்பு படப் பெயராக இருக்கும். அந்த கஞ்சிக் … Continue reading

Posted in Uncategorized | 38 Comments

#RajaChorusQuiz 79 பிள்ளைக்கனியமுதே

இந்தப் பாட்டைக் கேட்டால் அப்படியே கரைந்து போய் விடலாம். இந்தச் சிறு துளி இசையிலேயே அப்படி மூழ்கிவிட்டேன். கங்கை அமரன் வரிகளிலே வரும் இந்தப் பாடல் கே.ஜே.ஜேசுதாஸ் & சித்ரா ஜோடி சேர்ந்தும், தனித்துமாக இப்படத்திற்காகப் பதிவானது. மலையாள தேச இயக்குநரின் வெற்றிச் சித்திரங்களில் ஒன்று. ஒரு கிளியின் தனிமையிலே – பூவிழி வாசலிலே

Posted in Uncategorized | 47 Comments