Category Archives: Uncategorized

#RajaMusicQuiz 334 பொங்கி வரும் காவேரி

எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா பாடும் அருமையான பாடல் ஒன்று. படம் வெளிவராததால் முடங்கிப் போய் விட்டது. கங்கை அமரன் வரிகள். தொண்ணூறுகளில் வந்திருக்க வேண்டிய “பு” வரிசைப் படங்களைத் தேடுங்கள் ஸ்வரமாகக் கேட்கும். புதுக் காவேரி கரைமீது – புதிய ஸ்வரங்கள்

Posted in Uncategorized | 24 Comments

#RajaMusicQuiz 333 நீ போகும் பாதையில்

மலேசியா வாசுதேவன், சித்ரா பாடும் பாடல் இன்று. ராமராஜன் நடித்த, கங்கை அமரன் பாடல் எழுதி, இயக்காத படம். கம்மாக்கரை ஓரம் – ராசாவே உன்னெ நம்பி

Posted in Uncategorized | 33 Comments

#RajaMusicQuiz 332 பாடகி மனோரமா பிறந்த தினத்தில்

இந்தப் பாடலை எழுதியவர் கஸ்தூரி ராஜா என்றதுமே பாட்டைக் கண்டு பிடித்திருப்பீர்கள். சித்ரா மூலப் பாடலைப் பாட, மனோரமாவுடன் அருண்மொழி அணி செய்கிறார். நாட்டுப்புற பாட்டு ஒண்ணு – நாட்டுப்புறப்பாட்டு

Posted in Uncategorized | 36 Comments

#RajaMusicQuiz 331 பாடலாசிரியர் காமராசன் நினைவில்

பாடலாசிரியர் நா.காமராசன் நினைவு நாள் இன்று. அவரின் பாடல் வரிகளோடு இன்றைய புதிர். எஸ்.ஜானகியோடு எஸ்.பி.பாலசுப்ரமணியம் குழுவினர் பாடுகிறார்கள். நடிகர் தியாகராஜனின் படமிது. நானே ராஜா நீ வா ரோஜா – நீங்கள் கேட்டவை

Posted in Uncategorized | 28 Comments

#RajaMusicQuiz 330 பரிமாற வா

கவிஞர் வாலியின் வரிகளில் அமைந்த பாடல். இளையராஜாவும், சித்ராவும் பாடிய பாடல். கிராமத்து நாயகன் ராமராஜன் நடித்த படமிது. வட்டி எடுத்து – கிராமத்து மின்னல்

Posted in Uncategorized | 37 Comments