Category Archives: Uncategorized

#RajaChorusQuiz 15 இயக்குநர் மகேந்திரன் பிறந்த நாளில்

இன்று இயக்குநர் மகேந்திரனின் பிறந்த நாளில் அவரின் படம் ஒன்றிலிருந்து சிறப்புப் பாடல். பாடல் ஆக்கம் கங்கை அமரன். இந்தப் பாடலில் கோரஸ் குரல்கள் அந்தப் பிரதேசத்தின் மக்களின் குரலாக எஸ்.பி.சைலஜாவுடன் கூட ஒலிக்கின்றன. இரண்டு இடையிசையில் இயங்கும் அந்தக் குரல்களோடு பகிர்கிறேன். ஆசையக் காத்துல தூது விட்டு – ஜானி

Posted in Uncategorized | 41 Comments

#RajaChorusQuiz 14 பொட்டு வச்சுப் பூ முடிச்சு நின்றாளா

அறிவிப்பு : இந்தப் போட்டி நாளை சனிக்கிழமை இடம்பெறாது. மலேசியா வாசுதேவன் & எஸ்.ஜானகி பாடும் ஜோடிப் பாடலோடு கூட்டுக் குரல்களும் சேர்ந்து கும்மாளம் போடுகின்றன. இந்தப் படத்தில் கிராமியம் & மேற்கத்தேயம் என்று இரண்டிலும் கலக்கியிருக்கும் தனி ஆண் பாடகராக மலேசியா வாசுதேவன். அந்தப் பெரும் நடிகருக்கு இரண்டு நாயகிகள் வேறு. எல்லா லோகத்திலும் … Continue reading

Posted in Uncategorized | 48 Comments

#RajaChorusQuiz 13 இயக்குநர் ஶ்ரீதர் பிறந்த நாளில்

இன்று இயக்குநர் ஶ்ரீதரின் பிறந்த நாளில் ஒரு புதுமையான வகையில் அமைந்த கூட்டுக் குரல்களோடு. இவை பாடலின் ஆரம்பத்திலோ அன்றி இடை இசையிலோ வராது. பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் & எஸ்.ஜானகியும் பாடும் போது இருவருக்கும் ஒரு வரிக்குப் பின்னால் ஆமோதிக்குமாற் போல ஒலிக்கும் கூட்டுக் குரல்கள். மிகச் சிறிய இசைத் துணுக்கு என்பதால் அந்த இரண்டையும் … Continue reading

Posted in Uncategorized | 43 Comments

#RajaChorusQuiz 12 காண வந்த காட்சி

கே.ஜே.ஜேசுதாஸ் & வாணி ஜெயராமின் அழகான பாடல் போய்ச் சேர்ந்திருப்பது அன்றைய அழகான ஜோடி சுரேஷ் & ரேவதிக்கு. பாடல் வரிகள் எம்.ஜி.வல்லபன். முகப்பிசையிலேயே அந்தக் காதலர்களின் சைக்கிளோட்டச் சந்திப்பைக் காற்றின் ஓசையாய் மொழி பெயர்க்குதோ கூட்டுக் குரல்கள். உனைக் காணும் நேரம் நெஞ்சம் – உன்னை நான் சந்தித்தேன்

Posted in Uncategorized | 54 Comments

#RajaChorusQuiz 11 நீ வந்ததால் பூ பூத்தது

ஒன்றுக்கு இரண்டாக கூட்டுக் குரல் பகுதிகளை இணைத்து இன்று வரும் பாட்டு எஸ்.பி.சைலஜா பாடியது. படத்தின் தலைப்போடு பொருந்திப் போகக் கூடிய ஆரம்ப வரிகளோடு பாட்டு. ராசாவே உன்ன நான் எண்ணித்தான் – தனிகாட்டு ராஜா

Posted in Uncategorized | 51 Comments