Category Archives: Uncategorized

#RajaChorusQuiz 50 விஜய்காந்த் வாரம் – இனிக்கும் இளமை

புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் வாரத்தின் நிறைவுப் பாடலாக அருமையானதொரு தாம்பத்ய சங்கீதம். கே.ஜே.ஜேசுதாஸ் & எஸ்.ஜானகி இணைந்து பாடும் இந்தப் பாடலின் ஆரம்பக் கட்டு, இடையிசை இரண்டு என்று கோரஸ் குரல்கள் விரவியிருக்கும் பகுதிகளைக் கோத்துப் பகிர்கின்றேன். அவை மணப்பெண்ணின் தோழிமார் போன்று அழகியல் பறையும் குரல்களாகப் பதிந்திருக்கின்றன. குங்குமம் மஞ்சளுக்கு – எங்க முதலாளி

Posted in Uncategorized | 52 Comments

#RajaChorusQuiz 49 விஜய்காந்த் வாரம் – அமுத கானம்

இன்றைய கோரஸ் போட்டிப் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா பாடியிருக்கிறார்கள். இந்தப் பாடலைக் கேட்கும் போது சுபவேளை (கொண்டவீட்டி தொங்கா) பாடலின் நினைப்பும் கூட வரும். கங்கை அமரன் வரிகள். யார் ஆசைப்பட்டார்களோ தெரியவில்லை கங்கை அமரனுக்குத் தர்மம் செய்திருப்பார்கள், ஆமாம் படத்தில் இதே பாடலை கங்கை அமரனும், சித்ராவும் பாடும் ஒலி வடிவமே உண்டு. … Continue reading

Posted in Uncategorized | 30 Comments

#RajaChorusQuiz 48 விஜயகாந்த் வாரம் – எனக்கு நானே நீதிபதி

ஜெயசந்திரன், சித்ராவோடு தோன்றும் கூட்டுக்குரல்கள் இந்தக் காதல் பாடலின் நோகாத நடன அசைவுகளுக்கான குரல்களாகத் திகழும் இனிமை. இந்தப் பாடலின் சரணத்துக்கு முந்திய இசையில் தன் ஜோடியோடு அந்த நளினமான நடன அசைவுகள் கொடுப்பாரே கேப்டன் ஆகா. கவிஞர் மு.மேத்தா எழுதிய பாடல். பதிலைத் தப்பாகச் சொன்னால் கரண்டு கம்பத்துல கட்டித் தோல உரிச்சுடுவேன் ஆம்மா. … Continue reading

Posted in Uncategorized | 41 Comments

#RajaChorusQuiz 47 விஜயகாந்த் வாரம் – வைதேகி காத்திருந்தாள்

எஸ்.ஜானகி குழுவினர் பாடும் கூட்டுப் பாடலாக இன்றைய பாட்டு. ஆண் குரல்களும், பெண் குரல்களுமாகச் சங்கமிக்கும் இந்தப் பாடலில் இது போதாதென்று அருண்மொழியின் சிறு ஆலாபனை வேறு. ஆக மொத்தத்தில் ஆர்ப்பரிக்கும் பிரமாண்ட இசையில் நாயகிக்குத் தான் எத்தனை ஆதரவுக்குரல்கள். ஏழை, பணக்கார ஜாதி இல்லாது எல்லார்க்கும் பொழியும் இசை. அதோ அந்த நதியோரம் – … Continue reading

Posted in Uncategorized | 48 Comments

#RajaChorusQuiz 46 புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் பிறந்த நாளில்

இன்றைய பாடல் புரட்சிக் கலைஞர் விஜயகாந்தின் பிறந்த நாள் சிறப்புப் பாடலாக. மனோ & குழுவினர் பாடுகிறார்கள். கோரஸ் குழுவே பாடலை அடியெடுத்துக் கொடுக்கும் பாவனையில் ஒரு தன்னம்பிக்கை தரும் பாட்டு. வரிகள் கவிஞர் வாலி. போட்டதெல்லாம் வெற்றிக்கல்லு – பரதன்

Posted in Uncategorized | 43 Comments