Category Archives: Uncategorized

#RajaChorusQuiz 83 குங்குமம் மஞ்சளுக்கு இன்று தான்

இன்று இடம் பெறும் ஜோடிப் பாட்டோடு கோரஸ் குரல்கள் ஜோடி சேரும் இனிய நாத வெள்ளத்தில் மூழ்கிக் கொண்டே பதிலோடு வருக. பாடல் வரிகள் வைரமுத்து. பாட்டு ஜோடி யாரென்று சொல்ல மாட்டேன் ஏனென்றால் இந்தப் பாட்டே மிக மிக இலகுவானதாச்சே. கஸ்தூதூரி மானே கல்யாணத் தேனே கச்சேரி பாடு – புதுமைப் பெண்

Posted in Uncategorized | 51 Comments

#RajaChorusQuiz 82 வஞ்சி இளமானே

இளையராஜாவின் குடும்ப நிறுவனத் தயாரிப்பில் ஒரு சூப்பர் படம். பாடலை எழுதி இசையமைத்தவர் ராஜா, மனோ, எஸ்.பி.சைலஜா & குழுவினர்கள் பாடும் இந்தப் பாட்டின் தாள லயமும், இசை ஆர்ப்பரிப்புமே கற்பனையிலும் அதற்கான காட்சி போட்டு ரசிக்க வைக்கும். படத்தின் எல்.பி ரெக்கோர்டில் பெண் குரலைச் சித்ரா ஆக்கி விட்டார்கள். வா வா மஞ்சள் மலரே … Continue reading

Posted in Uncategorized | 49 Comments

#RajaChorusQuiz 81 அரிதாரத்தைப் பூசிக் கொள்ள ஆசை

எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் குழுவினரோடு கொட்டமடிக்கும் ஒரு துள்ளிசைப் பாட்டு. சத்யராஜுக்குக் கிடைத்த அல்வாத்துண்டுகளில் ஒன்று இது. கவிஞர் வாலி அவர்களின் வரிகளில் ஓடும் பாட்டு. ஆட்டமா பாட்டாமா பாத்துக்கோ – நடிகன்

Posted in Uncategorized | 50 Comments

#RajaChorusQuiz 80 கம்மாக்கரை ஓரம்

கவிஞர் வாலி அவர்கள் வரிகளில் ஒரு கலக்கலான தெம்மாங்குக் காதல் பாட்டு. இந்தப் பாட்டில் கோரஸ் குரல்களும் இடையில் பாடும் தருணம் ஆகா போட வைக்கும் ஓஓஓ ஓஹொகோ. எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி குழுவினர் பாடுகின்றார்கள். படத்தின் தலைப்பில் முதல் பாதி ரஜினி படம், இரண்டாவது பாதி சிம்பு படப் பெயராக இருக்கும். அந்த கஞ்சிக் … Continue reading

Posted in Uncategorized | 38 Comments

#RajaChorusQuiz 79 பிள்ளைக்கனியமுதே

இந்தப் பாட்டைக் கேட்டால் அப்படியே கரைந்து போய் விடலாம். இந்தச் சிறு துளி இசையிலேயே அப்படி மூழ்கிவிட்டேன். கங்கை அமரன் வரிகளிலே வரும் இந்தப் பாடல் கே.ஜே.ஜேசுதாஸ் & சித்ரா ஜோடி சேர்ந்தும், தனித்துமாக இப்படத்திற்காகப் பதிவானது. மலையாள தேச இயக்குநரின் வெற்றிச் சித்திரங்களில் ஒன்று. ஒரு கிளியின் தனிமையிலே – பூவிழி வாசலிலே

Posted in Uncategorized | 47 Comments