Category Archives: Uncategorized

#RajaChorusQuiz 87 அன்போடு காதலன்

மனோ & சித்ரா பாடும் இனிய காதல் பாட்டு, இதுவே தெலுங்கில் எஸ்பிபியோடு வைத்துக் கொடுத்தது. பாடல் வரிகள் வாலியார். இந்த கோரஸ் குரல்களைக் கேட்டாலேயே காதல் கொண்டாட்டமே தான். அவர்களே பாடலை முணுமுணுத்தும் காட்டுகிறார்களே? அரிச்சந்திரனை நினைத்தால் படத்தலைப்பு வருமே? கண்மணி கண்மணி மின்னிடும் – சத்தியவான்

Posted in Uncategorized | 34 Comments

#RajaChorusQuiz 86 தாவணி போட்ட தீபாவளி

குருவிக்கரம்பை சண்முகம் அவர்களின் வரிகளில் ஒரு கலக்கல் காதல் பாட்டு. எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி குழுவினரோடு பாடுகிறார்கள். இந்தப் பாட்டைக் கண்டுபிடிக்க நீங்கள் உடற்பயிற்சி எல்லாம் போடத் தேவை இல்லை. செங்கமலம் சிரிக்குது – தாவணிக் கனவுகள்

Posted in Uncategorized | 39 Comments

#RajaChorusQuiz 86 காவல் கைதி

பாரதிராஜாவின் படத்தில் ஒரு விநோத ஜோடிக் கூட்டு பாடும் பாட்டு. பாடல் வரிகள் வைரமுத்து. ஆண் பாடகர் பின்னாளில் தன் சுயப் பெயரோடு பிரபலமானவர். பாடகி உமாரமணன் இவர்களோடு கோரஸ் குரல்களின் விநோத ஓசை நயத்துடன் ஒரு காதல் பாட்டு. பொன்மானே கோபம் ஏனோ – ஒரு கைதியின் டைரி

Posted in Uncategorized | 46 Comments

#RajaChorusQuiz 85 சுகமான லாலி

அருண்மொழி குழுவினர் பாடும் ஒரு இனிய பாடல். கன்னடத்தில் இதே பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியிருக்கிறார். ஏ.எம்.ராஜா & சுசீலா பாடிய பழைய பாடல் ஒன்றை நினைப்பூட்டும் படத்தின் பெயர். பின்னாளில் தில் ஆக உயர்ந்த நடிகரின் ஆரம்ப காலப் படங்களில் ஒன்று. பாடல் வரிகள் பழநி பாரதி. அல்லி சுந்தரவல்லி லாலி – கண்களின் வார்த்தைகள்

Posted in Uncategorized | 39 Comments

#RajaChorusQuiz 84 கஸ்தூரி மானே

பஞ்சு அருணாசலம் அவர்கள் எழுதிய பாடலோடு இன்றைய புதிர். பாடலாசரியர், தயாரிப்பாளராக மட்டுமன்றி இந்தப் படத்தில் அவருக்கு இன்னொரு பொறுப்பும் உண்டு. மனோ & சித்ரா குழுவினரோடு பாடும் அட்டகாஷ் பாட்டு. இந்தப் பாட்டு ஏன் பிரபலமாகவில்லை என்ற கேள்வி இன்னமும் என் மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது தம்பி. என் மானே மீனே – தம்பி … Continue reading

Posted in Uncategorized | 32 Comments