Category Archives: Uncategorized

#RajaChorusQuiz 116 என் இதய சாம்ராஜ்ஜியத்தில்

மலேசியா வாசுதேவன், குழுவினர் பாடும் பாடல் இன்றைய போட்டிப் பாடலாக, இப்போது தான் சுடச் சுடத் தயாரானது :)))) இந்தப் பாடலில் கோரஸ் குரல்கள் மூலப் பாடகரோடு அணி செய்யும் பகுதியை மட்டும் பிரித்துப் பகிர்கின்றேன். கங்கை அமரன் வரிகளில் ரோஜா மணம் வீசும் பாட்டு. பாரதிராஜாவின் இயக்கம். ஏ.. ராசாத்தி ரோசாப்பூ வா..வா.. வா … Continue reading

Posted in Uncategorized | 55 Comments

#RajaChorusQuiz 115 செல்லக் கண்ணே

இன்றைய போட்டி நாளை இந்திய நேரம் மதியம் 12 மணி வரை தொடர்கிறது. கவிஞர் வைரமுத்து வரிகளில் எஸ்.ஜானகியோடு கோரஸ் குரல்களும் இணையும் பாட்டு இது. இதே பாட்டு ஆண் குரலிலும் உண்டு. உங்கள் விருப்பம் போலத் தேடினால் பதில் கிட்டும். பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா – நீங்கள் கேட்டவை

Posted in Uncategorized | 52 Comments

#RajaChorusQuiz 114 மனமதில் மயங்குதடி

இந்தப் போட்டி நாளை இந்திய நேரம் மதியம் 12 வரை தொடரும். இளையராஜா இசையில் பாடகர் ஜாலி ஆப்ரகாம் பாடிய அரிய பாடல்களில் ஒன்று அதுவும் ஜோடிப் பாட்டு என்றால் சொல்லவும் வேண்டுமா? கார்த்திக் நாயகனாக நடித்த படம். ஒரு சின்னமணிக்குயிலு சிந்து படிக்குதடி – கட்டப்பஞ்சாயத்து

Posted in Uncategorized | 49 Comments

#RajaChorusQuiz 113 கமல்ஹாசன் வாரம் – பாடல் ஏழு

கமல்ஹாசன் வாரத்தின் நிறைவுப் பாடலாக கவிஞர் வாலியின் வரிகளோடு. எஸ்.பி.பாலசுப்ரமணியம் & குழுவினர் பாடுகிறார்கள். வெளிநாட்டில் நின்று யோசித்தால் பதில் கிட்டும். வாய்யா வாய்யா போய்யா போய்யா – ஜப்பானில் கல்யாணராமன்

Posted in Uncategorized | 43 Comments

#RajaChorusQuiz 112 கமல்ஹாசன் வாரம் – பாடல் ஆறு

கவிஞர் வைரமுத்து வரிகளில் இன்றைய பாடல். படத்தை இயக்கியவர் ஒரு நடிகர் கூட. எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி & குழுவினர் பாடுகின்றார்கள். இந்தப் பாடல் முன்னர் ராஜா ஜோடிப் பாடல் சுற்றில் வந்தாலும் கோரஸ் புதிர் பொருத்தம் கருதி மீண்டும் வருகின்றது. சிறிய பறவை சிறகை விரிக்க – அந்த ஒரு நிமிடம்

Posted in Uncategorized | 50 Comments