Category Archives: Uncategorized

#RajaChorusQuiz 160 பூக்கள் நெஞ்சில் நாணம்

மஞ்சரி, திப்பு மற்றும் குழுவினர் பாடும் பாடல் இன்றைய புதிரில். மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்த ஒரே தலைப்புக் கொண்ட படம் இது. நாயகி, மற்றும் இயக்கு நர் கூடக் கேரளத்தவர் தான். இதற்கு மேல் மானே, தேனே பொன்மானே போட முடியாது பாடலோடு வருக. கேக்கலியோ கேக்கலியோ கண்ணனது கானம் – கஸ்தூரி மான்

Posted in Uncategorized | 40 Comments

#RajaChorusQuiz 159 நீ தந்த சங்கீதம்

இந்தப் படத்தில் ஒரேயொரு பாட்டு இளையராஜா, மீதி எல்லாமே எஸ்.ஜானகி பாடிய தனிப்பாடல்கள். இங்கே வரும் பாடலையும் எழுதியது பஞ்சு அருணாசலம் அவர்கள். படத் தலைப்பை திண்டுக்கல்லோடு தொடர்புபடுத்திப் பூட்டிப் பாருங்கள் பதில் கிட்டும் குடும்ப வாழ்வில் சந்தோஷத்தையும் கொடுத்து ஆசைக்கு ஒரு பிள்ளையையும் கொடுத்த நாயகனை நினைத்துப் பாடும் பாட்டு. மகேந்திரன் இயக்கிய படமிது. … Continue reading

Posted in Uncategorized | 43 Comments

#RajaChorusQuiz 158 பாடலாசிரியர் காமகோடியன் நினைவில்

இன்று இடம்பெறும் பாடல் அண்மையில் மறைந்த பாடலாசிரியர் காமகோடியன் நினைவில் ஒலிக்கிறது. பாடலை சித்ரா குழுவினர் பாடுகிறார்கள். மோகன் நடித்த இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் காமகோடியனே. சுசீலா பாடிய பழைய பாடலை நினைவுபடுத்தும் படத் தலைப்பு. இளமை ரதத்தில் – நினைக்கத் தெரிந்த மனமே

Posted in Uncategorized | 38 Comments

#RajaChorusQuiz 157 திருட்டுக் கண்ணு விரட்டுது மானே

இயக்குநர் கஸ்தூரி ராஜா எழுதி இயக்கிய படம், பாடல்களையும் அவரே கவனித்துக் கொண்டார். தேவி, அருண்மொழி & குழுவினர் பாடும் ஒரு அழகிய தெம்மாங்குக் காதல் பாட்டு. அடி கிழக்கால சுவத்துப் பக்கம் – நாட்டுப்புறப் பாட்டு

Posted in Uncategorized | 40 Comments

#RajaChorusQuiz 156 ஓ ப்ரியா ப்ரியா

எஸ்.ஜானகி, மனோ & குழுவினர் இணைந்து பாடும் பாடலொன்று. துன்பக் கேணியிலே காதலர் பாடும் பாடலுக்குச் சோக இசை கூட்டும் கோரஸ் குழுவினர். தேரடி வீதியிலே நின்று தேடாமல் பொருத்தமான இடத்தில் நின்று தேடினால் பாட்டும் உங்கள் வாசல் தேடி வரும். பிரியசகி பிரியசகி வருவேன் வாசல் தேடி – கோபுர வாசலிலே

Posted in Uncategorized | 41 Comments