Category Archives: Uncategorized

#RajaChorusQuiz 263 குயில் பாட்டு

கவிஞர் மு.மேத்தாவின் பாடல் வரிகள். கடவுளின் கையில் இருக்கும் ஒரு வாத்தியக் கருவியின் பேர்தான் படத்தின் பெயர். எஸ்.ஜானகி, குழுவினருடன் பாடும் பாடல் இது. ஒரு பூவனக்குயில்மாமரத்துல கூடு கட்டுனது – மரகதவீணை

Posted in Uncategorized | 32 Comments

#RajaChorusQuiz 262 மின்மினிக் கூட்டம்

மின்மினி குழுவினர் பாடும் பாடலோடு இன்றைய போட்டி. வாலியின் வரிகள். பிரசாந்த் நடித்த படங்களில் ஒன்று. பாடலின் கோரஸ் பாடும் ஆரம்ப வரிகள் இல்லாமல் மின்மினி பாடும் ஆரம்ப வரிகளும் ஏற்கப்படும். உசுக்கோ உசாக்கியா/படிக்கும் கல்லூரியும்

Posted in Uncategorized | 34 Comments

#RajaChorusQuiz 261 மாயத் தாயம்

கங்கை அமரன் வரிகளில் ஒரு அழகான பாடல். பாடகி ஜிக்கி குழுவினர் பாடுகிறார்கள். இந்தப் பாடல் முன்னர் தனிப்பாடல் சுற்றிலும் இன்னொரு இசையோடு வந்தது. ஆனால் இந்தப் போட்டியின் பொருத்தம் கருதி கோரஸ் பகுதியோடு. ராத்திரி பூத்தது காட்டுரோஜா – தாயம் ஒண்ணு

Posted in Uncategorized | 32 Comments

#RajaChorusQuiz 260 மே தினம்

இசைஞானி இளையாராஜா சுப தினங்களுக்கு மட்டுமல்ல மனித குல எழுச்சிக்குமான பாடல்களையும் கொடுத்திருக்கின்றார் என்ற வகையில் இன்றைய மே தினத்துக்குப் பொருத்தமானதொரு பாடலோடு. கே.ஜே.ஜேசுதாஸ் குழுவினர் பாடுகிறார்கள். பாடல் வரிகள் வைரமுத்து. மனிதா மனிதா இனி உன் விழிகள் – கண் சிவந்தால் மண் சிவக்கும்

Posted in Uncategorized | 42 Comments

#RajaChorusQuiz 259 கடலம்மா

கவிஞர் வாலியின் வரிகளோடு மனோ & குழுவினரோடு பாடும் பாடல். ஒரு பாடல் கடலோடு சம்பந்தப்பட்ட பெயர். பாடல் கூட மீனவரின் வாழ்வியலைக் காட்டும் அழகான பாட்டு. அக்கரையில்லா எங்கள் வாழ்க்கையிலே – கட்டுமரக்காரன்

Posted in Uncategorized | 42 Comments