Category Archives: Uncategorized

#RajaMusicQuiz 439 காதல் வித்து

இயக்குநர் லெனின் இயக்கி வெளிவராத படம். தியாகராஜன் நடித்த படம். கங்கை அமரன் வரிகளில் தீபன் சக்ரவர்த்தி & சசிரேகா பாடும் பாடல். விதைத்த விதை தளிராய் எழுந்து – எத்தனை கோணம் எத்தனை பார்வை

Posted in Uncategorized | 26 Comments

#RajaMusicQuiz 438 இந்தக் காதல் வாழும்

கவிஞர் வாலியின் வரிகளுக்கு இளையராஜா பாடும் பாடலிது. ஜதி சொல்பவர் அவர் அல்ல. இதே பாடலின் சந்தோஷ வடிவத்தை ஜேசுதாஸ் உடன் உமா ரமணன் பாடியிருக்கிறார். வெளிவராத படம் பெயரில் மட்டும் “புதிய” ஒட்டிக் கொண்டிருக்கிறது. ஓ வானமுள்ள காலம் மட்டும் – புதிய ஸ்வரங்கள்

Posted in Uncategorized | 23 Comments

#RajaMusicQuiz 437 பார்வையிலே குமரன்

எஸ்.ஜானகி பாடும் பாடல் இயக்குநர் ஶ்ரீதர் இயக்கிய படம். கவிஞர் வாலியின் வரிகள். ஒரு பெரும் நடிகர் நடித்தது. ஆயிரத்தில் நீ ஒருத்தன் – நானும் ஒரு தொழிலாளி

Posted in Uncategorized | 27 Comments

#RajaMusicQuiz 436 பொன்னூஞ்சல் ஆடுதம்மா

“அ” வரிசையில் அமைந்த ஆரம்பத் தலைப்போடு பூவின் இன்னொரு சொல்லையும் இணைத்தால் வரும் படப் பெயர். சுசீலாவுடன், எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் பாடல். வைரமுத்து வரிகள். காதல் தேகங்கள்-அன்புள்ள மலரே

Posted in Uncategorized | 25 Comments

#RajaMusicQuiz 435 கண்டேன் சிங்காரியை

கவிஞர் வாலியின் வரிகளில் அமைந்த பாடலிது. எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி பாடும் பாடல். இயக்குநர் ஶ்ரீதர் பிரபல நடிகரை வைத்து எடுத்த படம். செம்பருத்திப்பூவே சிங்காரம் கண்டு – நானும் ஒரு தொழிலாளி

Posted in Uncategorized | 29 Comments