Author Archives: kanapraba

#RajaMusicQuiz 271 பாடலாசிரியர் குருவிக்கரம்பை சண்முகம் நினைவில்

இன்று பாடலாசிரியர் குருவிக்கரம்பை சண்முகம் அவர்களின் நினைவினைப் போற்றி அவரின் பாடல் வரிகளில் அமைந்த பாடல். பி.சுசீலாவுடன் மனோ பாடுகிறார். சிவகுமார் நடித்த படம். இந்தப் பாடல் முந்திய சுற்று ஒன்றில் இடம்பெற்றாலும் இந்தச் சுற்றின் பொருத்தம் கருதி மீள வருகின்றது. இங்கே இறைவன் என்னும் கலைஞன் – சார் ஐ லவ் யூ

Posted in Uncategorized | 33 Comments

#RajaMusicQuiz 270 கண்ணனை நினைக்காத நாளில்லையே

கவிஞர் வாலியின் வரிகளில் பி.சுசீலா பாடும் பாடல். ஆனால் பாடல் இசைத்தட்டில் இன்னொரு பாடகியின் பெயரும் இருக்கும். புரட்சிக் கலைஞர் விஜயகாந்தின் படங்களில் ஒன்று. கேளாயோ கண்ணா நான் பாடும் கீதம் – நானே ராஜா நானே மந்திரி

Posted in Uncategorized | 26 Comments

#RajaMusicQuiz 269 காதலர் தினம்

பவதாரிணியோடு ஹரிஹரன் பாடும் பாடல். பழநி பாரதி வரிகள். இதுக்கு மேல் க்ளூ கேட்டால் மரியாதை இல்லை. என்னைத் தாலாட்ட வருவாளோ – காதலுக்கு மரியாதை

Posted in Uncategorized | 38 Comments

#RajaMusicQuiz 268 தேகம் எங்கும் இசை

புலவர் புலமைப்பித்தன் வரிகளில் அமைந்த பாடல். வாணி ஜெயராம் பாடுகிறார். ஶ்ரீதேவி & சரத்பாபு நடித்த படமிது. சங்கீதம் என் தேகம் – பால நாகம்மா

Posted in Uncategorized | 29 Comments

#RajaMusicQuiz 267 பவதாரிணி பிறந்த நாளில்

பவதாரிணி பிறந்த நாளில் பழநிபாரதி அவர்களின் வரிகளில் அவர் ஶ்ரீனிவாஸ் உடன் இணைந்து பாடும் பாடல். சத்யராஜின் படம் ஆனால் இந்தப் பாடல் அவருக்கானதல்ல. இளைய நிலவே இளைய நிலவே – பொண்ணுவீட்டுக்காரன்

Posted in Uncategorized | 33 Comments