Author Archives: kanapraba

#RajaChorusQuiz 155 சுகராகமே

கங்கை அமரனின் அற்புத வரிகளோடு இனிக்கும் காதல் பாட்டு. இந்தப் போட்டிக்குப் பதில் கொடுத்த பின்னாலும் உங்கள் காதுகளில் ஒலிக்கப் போகும் ராகமிது. ஏவிஎம் தயாரிப்பில் ஒரு இயக்குநரே நாயகனாகிய படம், எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி ஆகியோர் பாடும் பாடல் என்று முடிச்சுப் போட்டுத் தேடுங்கள் பாடலைக் கண்டுபிடிக்கலாம். அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம் – … Continue reading

Posted in Uncategorized | 55 Comments

#RajaChorusQuiz 154 கல்லூரிச் சாலை

மலேசியா வாசுதேவனுடன் பாடகர் கூட்டணி அணி சேர்ந்த பாட்டு. ஆகவே கோரஸ் ஆகவும் முன்னணிப் பாடகர்களே இயங்கியிருக்கிறார்கள். கல்லூரிக் காதல்களைப் படமாக்கியவரின் முதல் படம் இது. பாடல் வரிகள் கவிஞர் வாலி. ஓ! பார்ட்டி நல்ல பார்ட்டிதான் – இதயம்

Posted in Uncategorized | 54 Comments

#RajaChorusQuiz 153 சின்னக்குயில்களின் பாட்டு

கவிஞர் முத்துலிங்கம் அவர்களது பாடல் வரிகளோடு இன்றைய பாடல். சின்னக்குயில் சித்ராவுடன், குழுவினர் பாடும் ஒரு இனிய கீதம். மலையாளத்தின் இயக்குநர் தமிழில் கொடுத்த உணர்ச்சிக் காவியம். ஹே சித்திரை சிட்டுக்கள் – என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு

Posted in Uncategorized | 47 Comments

#RajaChorusQuiz 152 எண்ணமெல்லாம் வண்ணப்பூ

பிறந்திருக்கும் புத்தாண்டு உங்கள் அனைவரது வாழ்விலும் இனிய பூங்காவாய் இன்பம் பூத்துக் குலுங்க வாழ்த்துகள். இன்றைய பாடலை எஸ்.ஜானகி குழுவினர் பாடுகிறார்கள். வாலியின் வரிகள். ஜப்பான் நாட்டின் எழிலைத் தன் இசையில் அடக்கிய அழகான பாட்டு. சின்னப் பூ சின்னப் பூ – ஜப்பானில் கல்யாணராமன்

Posted in Uncategorized | 46 Comments

#RajaChorusQuiz 151 புத்தாண்டு போவோம்

புத்தாண்டை எதிர் நோக்கியிருக்கும் இந்த நாளில் கொண்டாட்டத்தோடு வரவேற்கும் பாட்டு. கவிஞர் வாலி அவர்கள் இங்கே எஸ்.ஜானகி, மனோ குழுவினர் இணைந்த ஒரு களியாட்டமாகக் கொடுத்திருக்கும் அழகான பாட்டு. நடிகர் பிரபு நடித்த படம். நள்ளிரவு மெல்ல மெல்ல – வெற்றி கரங்கள்

Posted in Uncategorized | 34 Comments