Author Archives: kanapraba

#RajaChorusQuiz 401 ஒரே விநாடிப் போட்டி

வெறும் ஒரு விநாடிக்குள் ஒலிக்கும் இந்த இசைத்துணுக்கில் கோரஸ் குரல்களை அடையாளம் கண்டு பாடலைக் கண்டு பிடித்தால் நீங்கள் தான் ராஜா அல்லது ராணி. ராஜா கைய வெச்சா அது – அபூர்வ சகோதரர்கள்

Posted in Uncategorized | 29 Comments

#RajaChorusQuiz 400 வது வெற்றி நாள்

இசைஞானி இளையராஜாவின் கோரஸ் குரல்களின் 400 வது போட்டியில் உங்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். இன்றைய போட்டியில் ஸ்வர்ணலதா குழுவினர் வழங்கும் இசை ஆர்ப்பரிப்பு கொண்டாட்டத்தின் முத்தாய்ப்பாக விளங்குகின்றது. என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் – வள்ளி

Posted in Uncategorized | 48 Comments

#RajaChorusQuiz 399 பருவமே புதிய பாடல் பாடு

மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி குழுவினர் பாடும் பாடலோடு இன்றைய போட்டி. பாடல் வரிகள் கங்கை அமரன். காலநிலையோடு சம்பந்தப்படுத்திய படத் தலைப்பு. பாடல் வரிகளில் இரண்டு அடிகளையும் சரியாகக் குறிப்பிடவும். பருவ காலங்களின் கனவு நெஞ்சில் பளிங்கு போல வந்த நினைவு – மூடுபனி

Posted in Uncategorized | 30 Comments

#RajaChorusQuiz 398 போவோமா ஊர்கோலம்

கவியரசு கண்ணதாசன் வரிகளில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குழுவினர் பாடும் பாடல். இந்தப் படத்தினை இயக்கியவர் மலையாளத்தின் புகழ் பூத்த இயக்குநர். பகலிலோ, சாமத்திலோ பதிலைத் தேடிப் பிடியுங்கள். பொன்னாரம் பூவாரம் – பகலில் ஓர் இரவு

Posted in Uncategorized | 37 Comments

#RajaChorusQuiz 397 சீரும் பேரும்

பஞ்சு அருணாசலம் வரிகளில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குழுவினர் பாடும் பாடல். கமல்ஹாசன் நடிப்பில் உருவான படம் என்று எல்லாம் சொன்னால் கண்டு பிடிப்பீர்களா? சொல்லச் சொல்ல என்ன பெருமை – எல்லாம் இன்ப மயம்

Posted in Uncategorized | 27 Comments