Category Archives: Uncategorized

#RajaMusicQuiz 77 இளையராஜா வாரம் – பாடல் இரண்டு

இன்றைய பாடலை இளையராஜா & சித்ரா கூட்டணி கட்டிப் பாடுகிறார்கள். பாடல் வரிகள் கவிஞர் வாலி. ரஜினிகாந்த் நடித்த படம் ஆனால் இந்தப் பாட்டு அவருக்கு இல்லை. வெள்ளிக்கிழம தல முழுகி – சிவா

Posted in Uncategorized | 46 Comments

#RajaMusicQuiz 76 இளையராஜா வாரம் – பாட்டு ஒன்று

இன்றிலிருந்து வரும் சனிக்கிழமை வரை இசைஞானி இளையராஜா அவர்கள் தனித்தும், ஜோடி சேர்ந்தும் பாடிய பாடல்களின் அணிவகுப்பு. இன்று இளையராஜா தனித்துப் பாடும் பாட்டு. இன்றைய பாடல் பிரபு நடித்த திரைப்படத்தில் இருந்து நினைவுபடுத்தும் பாடல். சிங்காரச் சீமையிலே செல்வங்களை சேர்த்ததென்ன – நினைவு சின்னம்

Posted in Uncategorized | 51 Comments

#RajaMusicQuiz 75 மல்லிகை வாசம்

இந்த அரிய பாடலைப் போட்டியில் இணைக்க வேண்டும் என்ற நோக்கில் ஒரு சிறு குரல் ஆலாபனையென்றாலும் பகிர்கிறேன். மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி பாடும் பாடல். ஒரே சொல் இரண்டு தடவை வரும் தலைப்பு. சுரேஷ் நடித்த படம். மல்லிகைப் பூவுக்குள் தூங்கிய தென்றலே வந்து விடு – மகனே மகனே

Posted in Uncategorized | 33 Comments

RajaMusicQuiz 74 பாடகி மனோரமா பிறந்த தினத்தில்

மனோரமா அவர்கள் பாடகியாகவும் மிளிர்ந்த போது இளையராஜாவுக்குப் பாடிய பாடல்களில் ஒன்று இன்றைய போட்டியில். பதிலைக் கொடுக்கும் போது முதற் சொல்லைப் பிரித்துக் கொடுக்கக் கூடாது. ஒரு பழைய பாடல் வரிகளில் அமைந்த படத் தலைப்பு. பஞ்சு அருணாசலம் அவர்களின் வரிகள். ஜெய்சங்கர் நடித்த படம். வழியா இல்லை தேடலில்? கானாங்குருவிக்கு கல்யாணமாம்எங்க மானாமதுரையில் ஊர்கோலமாம் … Continue reading

Posted in Uncategorized | 31 Comments

#RajaMusicQuiz 73 பாடலாசிரியர் நா.காமராசன் நினைவில்

நா.காமராசன் அவர்களின் வரிகளில் அமைந்த அற்புதமான பாடல் எஸ்.ஜானகி & எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரல்களில் ஒலிக்கிறது. பிரபு நடித்த இன்னொரு படத்தின் பாடல் வரிகள் இங்கே மோகன் நடித்த இந்தப் படத்துக்குக் கை கொடுத்திருக்கிறது. ஓ தேவன் கோவில் – ஓ மானே மானே

Posted in Uncategorized | 38 Comments